செய்தி விவரங்கள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக பிரஸல்ஸில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரஸ்சல்ஸில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் ஆரம்மபமான நேட்டோவவின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ட்ரம்ப் பிரஸல்ஸிற்கு விஜயத்தினை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே ட்ரம்பின் குறித்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் தொழில் புரிவோர் என பலதரப்பட்டோர் கலந்துகொண்டு ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த ஆரப்பாட்டத்தில் ட்ரம்பினால் இஸ்லாமியர்களுக்கு எதிராக  விதிக்கப்பட்ட தடை மற்றும் மெக்ஸிக்கோ எல்லையில் எழுப்பப்படவுள்ள சுவர் என்பவை தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு