செய்தி விவரங்கள்

ரஷ்ய தலையீடு தொடர்பில் ஒபாமா பாராமுகமாக இருந்துவிட்டார்- ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடுகள் இருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பாராமுகமாக இருந்தார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாததம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்கு முன்னராகவே, குறித்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அது குறித்த ஒபாமா எதுவித நடவடிக்கைகளும் ஒபாமா எடுக்கவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேரடியாக ஈடுபட்டார் என்பது குறித்து, கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாமிற்கு தெரியும் என அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்தே ட்ரம்ப் இவ்வாறானதொரு குற்றச்சாட்டை ஒபாமா மீது முன்வைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் அந்நாட்டிவன் உயர் மட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒபதாமா மீது இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் தொடர்ந்து நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தடுக்கும் வகையிலும் ஹிலரி கிளிண்டனை தாக்கவும், டிரம்பின் வெற்றிக்கு உதவவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு இணையப் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபட்டதாக ரஷ்ய அரசை சார்ந்த வட்டாரங்கள் ஒபாமாவிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அறிவித்துள்ளதாக குறித்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில்  குறிப்பிட்ப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு