செய்தி விவரங்கள்

எப்.பி.ஐ யின் விசாரணையில் அமெரிக்க ஜனாதிபதியின் மருமகன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும், அமெரிக்காவின் சிரேஷ்ட ஆலோசகருமான குஸ்னர், மத்திய புலனாய்வுத்துறையினால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடுகள் தொடர்பிலேயே குஷ்னர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து ஜெராட் குஷ்னருக்கு தெரிந்திருக்கலாமென விசாரணையாளர்கள் நம்புவதனாலேயே அவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளுக்கு குஷ்னர் முழு ஒத்துழைப்பை வழங்குவார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் தொடர்பிலான ஆதாரங்களை மத்திய புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மறுத்து வருவதுடன், எப்.பி.ஐயின் குறித்த செயற்பாடுகள் அமெரிக்க வரலாற்றில் ஒரு அரசியல்வாதிக்கெதிரான பாரிய வேட்டை என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு