செய்தி விவரங்கள்

மெக்சிகோ வளைகுடாவில் புயல் எச்சரிக்கை

மத்திய மெக்சிகோ வளைகுடாவில் வெப்பமண்டல புயலான சிண்டி நிலை கொண்டுள்ளதால் வடகிழக்கு வளைகுடா கடலோர பகுதிகள் முழுவதும் பாரிய மழைவீழ்ச்சி ஏற்படலாம் என்றும் இதனால் உயிருக்கு அச்சுறுத்தலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரித்துள்ளது.  

சிந்தி புயலின் தீவிரம் தென்மேற்கு Louisiana மற்றும் தென்கிழக்கு டெக்சாஸ் ஆகிய பகுதிகளை இன்றைய தினம் தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பமண்டல புயல் எச்சரிக்கை அலபாமா-புளோரிடா எல்லை வரையான கிழக்குப் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 60 மைல்கள் வேகத்துடன் வீசும் காற்றுடன் கூடிய சிண்டி புயல் டேக்ஸ்சாசின் தென்கிழக்கில்  305 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாளை முதல் புயலின் தீவிரம் குறைவடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு