செய்தி விவரங்கள்

மேற்கு இலண்டன் கட்டடமொன்று தீப்பற்றி எரிகின்றது

 மேற்கு இலண்டனின் லட்டிமர் வீதியில் உள்ள ஒரு கோபுரக் கட்டடம் பெரிதாக தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளிவந்துள்ளன .

கிரேன்பெல் கோபுரம்  என்று பலராலும் அறியப்படும் இக் கட்டடத் தீயை அணைக்க 200 தீயணைப்பு படையினர் முயன்று வருகின்றனர் .

இங்கு குடியிருப்பவர்கள்  பலர் பல்வேறு காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மெட்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர் .

விடிகாலை ஒரு மணியளவில் தீப்பிடித்தது பற்றி அறிவிக்கப்பட்டதாக  கூறப்படுகின்றது .

இலண்டன் நகர பிதா சாதிக் கான் இது ஒரு பாரிய தீ விபத்து என்று அறிவித்துள்ளதோடு இங்கு குடியிருப்பவர்களை அவசரம் அவசரமாக வெளியேற்றும் பணி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும்  கூறி உள்ளார் .

45தீயணைக்கும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கண்ணாடிகள் நொறுங்கும் சப்தமும் , எதோ வெடித்த சப்தமும்  கேட்டதாகவும்  ,கட்டடச் சிதைவுகள் கீழே விழுவதைக்  கண்டதாகவும் பீ பீ சி நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

கோபுரம் தீப்பற்றி எரிவதை பல  மைல்கள் தொலைவில் இருந்து காணக்கூடியதாக உள்ளது என்று இன்னொரு பீபீ சி  நிருபர் கூறி உள்ளார் .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு