செய்தி விவரங்கள்

அமெரிக்காவின் 12 நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள்

ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகளை வலியுறுத்தி அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

வொஷிங்டன், லொஷ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் பொது மக்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்மரம்ப்  பதவியேற்றதன் பின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களாக அமைந்துள்ளன.

சுமார் 12 அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் தமது உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புளோரிடா மாநிலத்தில் உள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 ஓரினச்சேர்க்கையாளர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்று ஒரு வருடத்தை நெருங்கும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “நாங்களும் மனிதர்களே“ “அமெரிக்காவை மீண்டும் ராஜாவாக்கு“ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததாக நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு