செய்தி விவரங்கள்

அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டடத் தீவிபத்தில் பலர் காயம்

பிந்திய செய்திகளின்படி மேற்கு இலண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில்  காயப்பட்டு 50 பேருக்கு  மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  பலர் இறந்துள்ளதாகவும்  அறியப்படுகின்றது. இன்று தீப்பற்றிய 24மாடிக் கட்டடம்  ஒரேயடியாகச் சரிந்து விழலாம் என்றும் அஞ்சப்படுகின்றது

தீயை அணைக்கும் பணி  இன்னும் முற்றுப் பெறவில்லை என்று சொல்லப்படுவதோடு இந்தக் கட்டடத்தில் இருந்து வெளியேற முடியாமல் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாக நேரில் சம்பவத்தைப் பார்த்தவர்கள் சொல்கின்றார்கள் .

தங்கள் குடும்ப உறவினர்கள் பற்றிய விபரங்களை அறிய 0800 0961 233 என்ற அவரசரத் சேவை இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மெட்ரோ போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு