செய்தி விவரங்கள்

இரு குழந்தைகளைக் கொன்றதாக 19 வயது யுவதி மீது குற்றச்சாட்டு

தனது இரு பிள்ளைகளையும்  காரில் பூட்டி வைத்து விட்டு தனது நண்பர்களின் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளச் சென்ற பெண்மணி ஒருவர், திரும்பி வந்தபோது இரண்டு குழந்தைகளுமே மூர்ச்சை அடைந்த  நிலையில் காணப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த அமன்டா என்ற 19வயது இளம் பெண்ணே இவ்விதம் நடந்துகொண்டிருக்கிறார்.

இரவு விருந்திற்கு செல்வதற்கு  முன்பு, காரில் இரு பெண்பிள்ளைகளையும் வைத்து பூட்டிச் செல்ல முயன்றபோது, பிள்ளைகள் வீறிட்டு அலறியதாக தெரிவிக்கப்படுகின்றது. முறையே ஒரு வயதும் இரண்டு வயதுமுடைய இந்த இரு பிள்ளைகளும் மூர்ச்சித்து கிடப்பதை விருந்து முடிந்து மறுநாள் காலை வந்தபோது அவதானிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் பயத்தின் காரணமாக இந்தப் பிள்ளைகளை தாய் மருத்துவமனைக்கு  உடனே எடுத்துச் செல்லவில்லை. அடுத்த நாள் குழந்தைகளை எடுத்துச் சென்ற போது அது பயனளிக்கவில்லை. இரு குழந்தைகளும் இறந்து விட்டன.

பூக்களை முகர்ந்ததால் சுயநினைவை இழந்துவிட்டன என்று ஆரம்பத்தில் பொய் கூறிய குறித்த பெண், பின்பு 15மணி நேரம் பிள்ளைகள் காரில் பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த உண்மையை அதிகாரிகளிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் இரு வருட சிறை வாசம் அனுபவிக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு