செய்தி விவரங்கள்

மசூதி அருகே இறந்த நிலையில் 17வயதுப் பெண்ணின் உடலம்

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாவட்டத்தில்  காணாமல்போன 17வயதுப் பெண்ணின் உடலம் மசூதி அருகே தாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது . நப்ரா ஹுசெயின் என்ற பெயருடைய இந்த இளம்பெண் தன் நண்பிகளோடு தெருவில் சென்றுகொண்டிருந்த சமயம் , ஒரு சாரதியோடு வாக்குவாதம் செய்ததாக பொலீசார் கூறுகிறார்கள் ,

தனது வாகனத்திலிருந்து இறங்கி, பெண்ணை  தாக்கி விட்டு சென்றதாகவும் அதன் பின் உடலைக் காணோம் என்றும் சொல்லப்பட்டது .

22வயதான ஒருவர் இந்த மரணம் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளார் .தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இச் சம்பவம் ஞாயிறன்று காலை இடம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு