செய்தி விவரங்கள்

பாரம்பரிய சின்னங்களில் தாஜ்மஹால் இரண்டாம் இடம் !

உலக அளவிலான  பாரம்பரிய சின்னங்களில், தாஜ்மஹால் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக, யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 

பாரம்பரிய  சின்னங்களில்    தாஜ்மஹால்    இரண்டாம்    இடம் !

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலானது,  மொகலாய மன்னன் ஷாஜகானால்  தனது மனைவியின் நினைவாக ஆக்ராவில் கட்டப்பட்டது.

இந்தியாவின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் காதல்ச் சின்னம் தாஜ்மஹாலை,  பாரம்பரிய சின்னமாக  யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. 

டிரிப் அட்வைசர்  என்ற   இயங்கலை சுற்றுலா நிறுவனம், உலகிலேயே சிறந்த பாரம்பரிய சின்னங்கள் சம்பந்தமாக கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய சின்னங்கள் இடம்பெற்று இருந்தன.

இதில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில் முதல் இடத்தையும், தாஜ்மஹால்   இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் சீன பெருஞ்சுவர், பிரேசில் நாட்டில் உள்ள இஹாஷூ தேசிய பூங்கா, உள்ளிட்ட இடங்களும் இப்பட்டியலில்  இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே,  1983 -ம் ஆண்டு  தாஜ்மஹாலானது, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை, புராதன நகரமாக யுனெஸ்கோ அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு