செய்தி விவரங்கள்

அமெரிக்க எம்.பி. ஸ்டீவ் ஸ்காலஸ் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோர் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலைஸ் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் அடிப்பந்தாட்ட (பேஸ்பால்) விளையாட்டுக்கான பயிற்சியில் வர்ஜீனியா மாகாணம், அலெக்ஸாண்டிரியா நகரிலுள்ள மைதானத்தில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியின் கொறடாவான ஸ்டீவ் ஸ்கேலைஸ் புதன்கிழமை ஈடுபட்டிருந்தார்.

அப்போது, இயந்திரத் துப்பாக்கியுடன் அந்த இடத்துக்கு வந்த ஒரு நபர் சரமாரியாக சுட்டதில், ஸ்டீவ் ஸ்கேலைஸும், அவரது பாதுகாவலர்கள் உள்பட 4 பேரும் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், துப்பாக்கியால் சுட்ட நபருக்கும் துப்பாக்சி சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தான குற்றவாளி எனக் கருத முடியாது எனவும் போலீஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவத்தில் காயமடைந்த ஸ்டீவ் ஸ்கேலைஸுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு