செய்தி விவரங்கள்

தென் கலிபோர்னியாவில் தீ –100 ஏக்கர் பாதிப்பு

தென் கலிபோர்னியாவில் சாலையில் ஏற்பட்ட தீயினால் பாதைகள் மூடப்பட்டுள்ளதோடு பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விபத்துகுள்ளான வாகனம் அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் மரம் தீப்பற்றிக் கொண்டுள்ளதுடன் விரைவாக அந்தப் பகுதியில் தீ பரவியுள்ளது.

அரை ஏக்கர் நிலப்பகுதியில் பரவ ஆரம்பித்த தீ, பன்னிரண்டு மணித்தியாலங்களுக்குள் நூறு ஏக்கர் வரை பரவியுள்ளது.

தீ பரம்பல் காரணமாக அந்தப் பகுதி மலைப்பிரதேசமும் பள்ளத்தாக்கும் கரிய புகை மண்டலமாகக் காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கட்டடமொன்று சேதமடைந்ததோடு தீயணைப்புப் படை வீரர் ஒருவரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

மேலும் எழுபது வீடுகளின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்வரை பிரதேச வாசிகள் அவசர வெளியேற்ற மையத்திற்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு