செய்தி விவரங்கள்

எல்லையில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற தென்கொரியா முடிவு!

எல்லையில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற தென்கொரியா முடிவு!

 

எல்லையில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற தென்கொரியா முடிவு செய்துள்ளது.

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் 65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பதுதான்.

கிம் ஜாங் உன் - மூன் ஜே இன் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில்இ எதிர்வரும் மே மாதம் பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடகொரியா எல்லையில் உள்ள தென்கொரியா அமைத்துள்ள எதிர்ப்பிரச்சார ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கு தென்கொரியா முடிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு