செய்தி விவரங்கள்

கொரிய வளைகுடாவில் கூட்டுப்பயிற்சியில் தென்காரியா மற்றும் அமெரிக்கா

அமெரிக்காவுடன் இணைந்து இராணுவ கூட்டுப்பயிற்சிகளை தென்கொரியா முன்னெடுத்துள்ளது.

அமெரிக்காவின் சுப்பர்சோனிக் ஃபி-1ஃபி லான்சர் பொம்பர் என அழைக்கப்படும் போர் விமானத்துடன் இணைந்தே இந்த கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

கடந்த சில காலமாக கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்றங்களை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வளங்களை அழிக்கும் பொருட்டே கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், தென்கொரிய வான்பரப்பில் பறந்து, அணு குண்டை எவ்வாறு இலக்கு வைத்து வீசுவது என்பது தொடர்பில் வடகொரியா இன்று பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு