செய்தி விவரங்கள்

பத்து பல இலட்சங்கள் ஆகியது

பத்து பவுண்ட்ஸ் தொகைக்கு வாங்கிய ஒரு வைர மோதிரம் இலண்டன் ஏல விற்பனையில் 656,750 பவுண்டஸ் தொகைக்கு விற்பனையாகிää அது பரபரப்பான செய்தியாகி இருக்கின்றது.
இந்த வைர மோதிரத்தை மேற்கு இலண்டனில் எண்பதுகளில் வெறும் 10 பவுண்ட்ஸ் கொடுத்து வாங்கிய பெண் ஒருவர் அதன் நிஜப் பெறுமதி தெரியாமல்,  அதைப் பல தசாப்த காலம் தன் விரலில் அணிந்து வந்துள்ளார்.
அந்த மேதிரத்திலுள்ள வைரம் 26 காரட் என்பதை அவர் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. இந்த வைரம் 19ம் நூற்றாண்டு கால வைரம் என்று சொல்லப்படுகின்றது. பார்க்க அழகாக இருக்கின்றது என்று இதை அவர் தன் விரலில் அணிந்து வந்துள்ளதாக உலகின் மிக பிரபல்ய ஏலவிற்பனை நிறுவனமான சொதெபியின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரத்தின் மீது ஏராளமான அழுக்கு படிந்திருந்ததால், வைரத்திற்கான மினுமினுப்பு இருந்திருக்கவில்லை. எனவே இந்த வெள்ளை வைரத்தின் அசல் வெறுமதியை அறிய வாய்ப்பில்லை என்று கூறும் ஊழியர்   இந்த மோதிரக்காரரின் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.
30 வருட காலம் இந்த மோதிரத்தை அணிந்த பின்னரே ,  இந்தப் பெண் மோதிரத்தை ஏலவிற்பனை நிறுவனத்திடம் எடுத்துச் சென்றுள்ளதாக அறியப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு