செய்தி விவரங்கள்

ஊதா கதிர்வீச்சு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தோல் புற்றுநோய் அபாயம்!

கனடா புள்ளிவிபரவியலினால் தொகுக்கப்பட்டுள்ள புதிய கணிப்பீடுகளின்படி இந்த கோடைகாலத்தில் ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்படும் பகுதிகளில் தோல் புற்றுநோய் அபாயமும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கின்றது.

மெலனோமாவின் ஒட்டு மொத்த அபாயம் 22-சதவிகிதத்தால் ஒவ்வொரு ஊதா கதிர்வீச்சு மண்டலத்திலும் அதிகரிக்கின்றதெனவும், புள்ளிவிபரவியல் கணிப்பீட்டின் படி  மொன்றியலை விட ரொறொன்ரோவில் வசிப்பவர்களிற்கு 16% அதிக அபாயம் இருக்கும் எனவும், எட்மன்டனை விட கல்கரி பகுதி மக்களுக்கு 38% பாதிப்பு எனவும் கனடா  தெரிவிக்கின்றது.

கனடாவில் தோல் புற்று நோய் மிகவும் பொதுவானதாக உள்ளது எனவும், தினசரி UV index, குறித்து 41% கனடியர்கள் கவனம் செலுத்தவதில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு இதன் அதிகரிப்பை அவதானிக்க முடிவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில்  கடந்த வருடம் 6,800 மெலனோமா நோயாளிகள்  கண்டறியப்பட்டுள்ளனர். சூரியனில் இருந்து வரும் யுவி வெளிப்பாடு மற்றும் தோல் பதனிடும் படுக்கைகள் போன்றன இந்நோய்க்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

சூரிய ஒளி உட்புகா வண்ணம் நெருக்கமாக நெய்யப்பட்ட ஆடைகளை அணிதல், பரந்து விரிந்த விளிம்புகள் கொண்ட தொப்பிகளை அணிதல் சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிக வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்க,  சூரியன் யுவி குறியீடு மூன்று அல்லது அதிகமாக இருக்கையில், வெளியில் செலவழிக்கும் நேரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சன்ஸ்கிரீன்-குறைந்தது 30 SPF அல்லது அதற்கும் அதிகமாக உபயோகிப்பது சிறந்ததென பரிந்துரைக்கப்படுகின்றது.

Share this article

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு