செய்தி விவரங்கள்

சுறாக்களோடு நீச்சல் போட்டி என்கிறார் அமெரிக்க நீச்சல் வீரர்

ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் துறையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கல் பெல்ப்ஸ் , அடுத்த மாதம் ஒரு சுறாவுடன் நீச்சல் போட்டியில் இறங்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன .

டிஸ்கவரி சானால்(Discovery Channel) என்று பலரும் அறிந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த நீச்சல் வீரர் இந்த சாசகத்தை நடாத்திக் காண்பிப்பார் என்று இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள் .

2016இல் இடம் பெற்ற றியோ நகர ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன்  ஓய்வு பெற்ற இந்த 31 வயது அமெரிக்க நீச்சல் வீரர்,  மொத்தம்   23 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றேடுத்தவர் என்பது இங்கு அவதானிக்கத் தக்கது ,

இவரால் அதிவேகமாக மணிக்கு ஆறு மைல் நீந்த முடியும் .அதே நேரம் ஒரு சுறாவினால் உச்ச வேகமாக மணிக்கு 25மைல் நீந்த முடியும் .

அடுத்த மாதம் 23ந் திகதி ஆரம்பமாக உள்ள இந்த நீச்சல் வாரத்தில் எப்படி இவர் நீந்தப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு