செய்தி விவரங்கள்

அமெரிக்காவின் இடைத் தேர்தலில் ரஷ்யா தலையிடலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இவ்வாண்டு நடத்தப்படும் இடைத் தேர்தலில் ரஷ்யா தலையிடலாம் என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இடைத் தேர்தலில் ரஷ்யா தலையிடலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரங்கள் மற்றும் தவறான அறிக்கைகள் ஊடாக அமெரிக்காவின் இடைத் தேர்தலில் தலையிடக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக புலனாய்வு நிறுவனங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டும் இவ்வாறான நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டும் அதன் பின்னரும் நடைபெறும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் ரஷ்யாவும் ஏனைய நாடுகளும் தலையிடக் கூடும் என அமெரிக்க தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் டான் கொஸ்தா காங்கிரஸ் குழுவில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனநாயகத்தை குறைத்துமதிப்பிடும் வகையில் இரண்டு வருடங்களுக்கு முன்னரும் ரஷ்யா வெற்றிகரமாக இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டதாக டான் கொஸ்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு