செய்தி விவரங்கள்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவன் மரணம்

வட கொரியாவின் சிறையில் 15மாதங்களுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவன் இறந்துள்ளதாக பெற்றோர் அறிவித்துள்ளனர் ,

கடந்த வாரம் செவ்வாய் அன்று இந்த மாணவர் அமெரிக்காவிற்கு விடுதலை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு இருந்தார் .22வயதான ஒட்டோ வாம்பியர் இதற்கு முன்பு  வட கொரியாவில் சுயநினைவை இழந்த நிலையில் இருந்தார் என்று பின்பு தெரியவந்தது .

இவர் மூளை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது வட கொரியாவில் இவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையே மரணம் சம்பவிக்க காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள் .

அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.20க்கு மரணமாகி இருப்பதாக பெற்றோர் அறிவித்துள்ளனர்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு