செய்தி விவரங்கள்

லண்டன் தீ விபத்திற்கு நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

மேற்கு லண்டன் ஹ்ரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கோரி லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் லண்டன் நாடாளுமன்றத்தில் ஒன்று கூடிய மக்கள் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜ் வீதியை மறித்து குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10 ஆம் திகதி கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள ஹ்ரென்ஃபெல் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 79 பேர் உயிரிழந்திருந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த தீ விபத்தானது பிரித்தானியாவின் பொருளாதார பிரிவின்மீது கவனத்தை திசைதிருப்பியிருந்தது.

அத்துடன் குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வரும் நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு