செய்தி விவரங்கள்

கர்ப்பிணி பெண் கொலை வழக்கு; தகவல் தெரிவிப்பவருக்கு 50,000 டொலர் பரிசு!

கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தப்பிய நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பொலிசார் 50,000 டொலர் வெகுமதி அறிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவமானது கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் இடம்பெற்றது.

ரொறொன்ரோ ஜேம்சன்ரவுனில் கடந்த ஆண்டு மே மாதம், கன்டிஸ் றோசெலி பொப் எனப்படும் 33-வயது பெண், கூடைப்பந்தாட்டம் பார்த்துவிட்டு வேறு மூவருடன் வாகனமொன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில்  இவருடன் பயணித்தவர்களில் ஒருவரை ஜோன் காலன்ட் புளுவாட் மற்றும் ஜேம்ஸ்ரவுன் பகுதியில் இறக்க சென்ற போது இனம்தெரியாத நபர் ஒருவர் இவர்களது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சம்பவத்தின்போது காரில்  ஐந்து மாத கர்ப்பிணியான  பொப் மட்டும், காரின் பின் இருக்கையில் இருந்ததாக  கூறப்படுகிறது.

படுகாயமடைந்த  பொப்பிற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அது மட்டுமின்றி அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவு மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. இருந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் அடுத்த ஒரு மாதத்தில் இறந்துள்ளது.

இது இவ்வாறிருக்க குறித்த துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த போதும், பொலிசாரால் குறித்த சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு சுமார்  50,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு