செய்தி விவரங்கள்

பவுண்ட்ஸின் பெறுமதி வீழ்ச்சி –என்றுமில்லாத பணவீக்கம்

கடந்த வருடம் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு முடிவில் ஏற்பட்ட பணவீழ்ச்சி பல மாதங்களாக தொடர்ந்து  வந்தது , இப்பொழுது பண வீக்கம்,  கடந்த நான்கு வருடங்களில் என்றுமே இல்லாதவாறு மோசமான நிலையை எட்டியிருப்பதாக சொல்லப்படுகின்றது .

ஒரு வருடத்திற்கு முன்பு 0.3ஆக இருந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்,  கடந்த ஏப்ரிலில் 2.7வீதமாக உயர்ந்து, சென்ற மே மாதம் 2.9 வீதத்தால் அதிகரித்துள்ளது .

வாழ்க்கைச்செலவு உயர்ந்திருப்பதாகவும் அதற்கான காரணம் வெளிநாட்டுப் பயணங்கள் அதிக பணத்தை முழுங்குவதாக இருப்பதோடு , இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதும்  ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

அரசியல் ஸ்திரமற்ற  நிலைமையும் , அடுத்தடுத்து இடம்பெறும் அசம்பாவிதங்களும் பிரிட்டனில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கி இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது  

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு