செய்தி விவரங்கள்

துப்பாக்கி பிரயோகம் செய்தவர் பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின்  வேர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா என்னும் இடத்தில் உள்ள பூங்கா ஒன்றில் அமெரிக்க குடியரசுக் கட்சி சட்டவியலாள ர்களை நோக்கி சாரமாரியாக துப்பாக்கி பிரயோகம் செய்த ஒருவர் பொலிசாரால் ஸ்தலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .

இந்தத் தாக்குதல் மிருகத்தனமானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார் . இவர்கள் விளையாடிப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த நேரமே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் அமெரிக்கர் ஒருவர் என்றும் அவர் பெயர் ஜேம்ஸ் ஹொட்ஜ் என்றும் கூறப்படுகின்றது .

அமெரிக்க நேரப்படி காலை ஏழு மணியளவில் இச் சம்பவம் நடந்ததாகவும்  ஐவர் காயப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு அரசியல்வாதியின்  நிலை மிக மோசமாக உள்ளதாக அறியப்படுகின்றது 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு