செய்தி விவரங்கள்

ஹவாய் பிட்ஸாவின் பிதாமகன் 83வயதில் மரணம்

பிட்ஸா பிரியர்களுக்கு இது கவலையான செய்தியாக இருக்கலாம். பிட்ஸா  உண்பவர்களுக்கு அதில் பல ரகங்கள் இருக்கின்றன என்பது நன்றாகவே தெரியும் . . இதில் ஒன்றுதான் ஹவாயன் பிட்ஸா. இதில் அன்னாசித் துண்டுகள் பரவலாக இருப்பது அதன் தனிச்சிறப்பு.

இந்த ரக பிட்ஸாவை அறிமுகப்படுத்தியவர்தான் சாம் பனபோலோஸ் . பிட்ஸா என்றால் இத்தாலி நம் நினைவுக்கு வந்தாலும் , இறந்த இந்த பிட்ஸா பிதாமகன் கனடியர் என்பதும் பிறப்பால் கிரேக்கர் என்பதும்  குறிப்பிடத்தக்கது . 1954இல்  தனது இருபதாவது வயதில் இவர் கிரேக்க நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவில் குடியேறி, அங்கு பல உணவு விடுதிகளை தனது இரு சகோதரர்களுடன் இணைந்து திறந்துள்ளார் .அதில்  ஒரு உணவகம் 1962இல் தகரத்தில் அடைக்கப்பட்ட அன்னாசித் துண்டுகளை பரப்பி உருவாக்கிய பிட்ஸாதான் இந்த ஹவாய் பிட்ஸா.

அப்படியானால் அந்தப் பிட்ஸாவுக்கு வயது 45!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு