செய்தி விவரங்கள்

விமானங்கள் பறக்க முடியாத நிலை; பீனிக்ஸில் அதிக வெப்பம்

அமெரிக்காவின் பீனிக்ஸ் பகுதியில் வெப்பநிலை உயர்வடைந்து வருவதால் 40 க்கும் அதிகமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

வெப்பநிலை அதிகமாக உள்ளதால் விமானங்கள் பறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வெப்பநிலை இன்று 49 பாகை செல்ஸ்சியஸ் வரை அதிகரிக்கலாம் என வானிலை அவதானிப்பு மையம் எதிர்வுகூறியுள்ளது. 

ஸ்கைய் ஹாபர் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல விமான சேவைகளை தாம் இரத்துச் செய்துள்ளதாக அமெரிக்கன் ஏயார்லயன்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

ஏனைய விமான சேவை நிறுவனங்களும் தமது சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு