செய்தி விவரங்கள்

மசூதி அருகே வடக்கு இலண்டனில் வாகனத் தாக்குதல்

இலண்டன் மேற்கே உள்ள பின்ஸ்பெரி(Finsbury)பூங்கா மசூதியை ஒட்டியுள்ள நடைபாதையில் வாகனமொன்றை பாதசாரிகள் மீது மோத விட்ட சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு , பத்துப் பேர் வரையில் காயப்பட்டுள்ளதாக பீ பீ சீ செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு இடம் பெற்ற இத் தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதல் என்று முத்திரை இட்டுள்ளார்கள் . வாகனத்தை ஓட்டி வந்த சாரதி அனைத்து முஸ்லீம்களையும் கொல்லவேண்டுமென்று சப்தம் இட்டதாக, ஸ்தலத்தில் நின்ற அப்துல் ரஹ்மான்  என்பவர்  கூறியுள்ளார் .

தாக்குதல் நட்டத்தியவர் வயிற்றில்  தான் குத்தியதாகவும்,  அதைத் தொடர்ந்து பலர்  தாக்கி  , சம்பந்தப்பட்டவரை பிடித்து பொலிசாரிடம் கையளித்தோம் என்று இவர் மேலும் கூறியுள்ளார் .

ரம்ழான்  நோன்பிருப்பவர்களுக்கு மேலும் பாதுகாப்பளிக்க போலீசார் மேலதிகமாக அனுப்பப்பட்டுள்ளதாக லண்டன் நகரபிதா சாதிக் கான் அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு