செய்தி விவரங்கள்

ஒஹைய்யோ மாநில அரச இணைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் ஒஹைய்யோ மாநிலத்தில் அரச இணையத்தளங்கள் சிலவற்றினூள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாநில ஆளுநர் உள்ளிட்ட இணையத்தளங்கள் இந்த இணைய வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், ஐ.எஸ்சிற்கு ஆதரவான செய்திகளும் தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.

முஸ்லீம் நாடுகளில் சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே பொறுப்பு எனவும் இஸ்லாமிய இராஜ்ஜியத்தை நான் நேசிக்கின்றேன் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரீம் சிஸ்ரம் டி ஸ்சட் என்ற பெயரில் இந்த இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களில் வெளியாகும் தகவலில் அரபு சின்னமும் ஐ.எஸ் ஆயுததாரிகளின் கொடியில் எழுதப்பட்டிருப்பது போல் கறுப்பு மற்றும் வெள்ளை எழுத்துக்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு