செய்தி விவரங்கள்

65.6 மில்லியன் இடம்பெயர்ந்தவர்கள் உலகெங்கும் இருப்பதாக ஐ .நா .புள்ளி விபரம்

சமீபத்திய  ஐ .நா .சபையின் புள்ளி விபரங்களின்படி , உலகெங்கும் 65.6 மில்லியன் இடம் பெயர்ந்தவர்கள்  இருப்பதாகவும் , இது ஒரு உலக சாதனை என்றும் சொல்லப்படுகின்றது .பிரித்தானியாவின் ஜனத்தொகையை விட இது அதிகம் என்கிறார்கள் .

2015இல் காணப்பட்ட தொகையை விட   30,000 அதிகமான தொகை,    2016இன் முடிவில் காணப்பட்டுள்ளதாக  புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன 2014-15 காலகட்டத்தில் 5மில்லியனால் அதிகரித்த தொகையோடு ஒப்பிடும்போது , இந்த 30,000,   சிறிய தொகை என்று கருதுகிறார்கள் .

உலகம் சமாதானமாக இருக்க முடியாமல் திணறுகிறது என்று ஒரு அதிகாரி கூறி இருக்கின்றார் .

2016இல் தென் சூடானில் வெடித்த வன்முறை காரணமாக ,  34,000 பேர் அளவில் அயல் நாடான உகண்டாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் . இத் தொகை  வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு தொகையாக அந்தச் சமயம் நோக்கப்பட்டது .  

இந்தச் சாதனை படைக்கும் தொகை , பணக்கார நாடுகள்  அகதிகளை தத்தம் நாடுகளில் ஏற்றுக் கொள்தில்  மாத்திரமல்ல,  சம்பந்தப்பட்ட நாடுகளில் மீள் கட்டமைப்பு செய்வது , சமாதான நடவடிக்கைகளில் இறங்குவது போன்ற விடயங்களிலும் சிந்திக்க வைக்கும் என்று ஐ நா சபை பிரஸ்தாபித்துள்ளது .

இந்த65.6  மில்லியன் பேரில் 22.5 மில்லியன்  பேர் அகதிகளாகவும்  , 40.3மில்லியன் பேர் தங்கள் சொந்த நாடுகளில் இடம் பெயர்ந்தவர்களாகவும் , 2.8மில்லியன் பேர் அகதி அந்தஸ்து தேடுபவர்களாகவும் உள்ளார்கள் .

நாடுகளைப் பொறுத்த மட்டில்  5.5  மில்லியன் தொகையினர் சிரியாவிலிருந்து வந்தவர்களாகவும்     2.5 மில்லியன் தொகையினர் ஆபுகானிஸ்தான் நாட்டவர்களாகவும்  1.4 மில்லியன் பேர் தெற்கு சூடானில் இருந்து வந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள் .

அகதியாக வருபவர்களை ஏற்றுக் கொள்வதில் துருக்கி நாடு 2.9 மில்லியன் அகதிகளை ஏற்று, முன்னணி நாடாக திகழ்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு