செய்தி விவரங்கள்

79 ஆக உயர்ந்துள்ள இலண்டன் குடிமனை தீ விபத்து மரணங்கள்

சமீபத்தில் மேற்கு இலண்டனில் விடிகாலை இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பு தீவிபத்தில் கொல்லப்பட்டோர் தொகை இப்பொழுது 79 ஆக உயர்ந்துள்ளது . இந்தத் தகவலை நேற்று திங்களன்று போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலண்டன் நகர பொலிஸ் கொமாண்டர் ஸ்டுவர்ட் கண்டி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்” 79 பேர் இறந்து விட்டதாக அல்லது காணாமல்போயிருக்கலாம் என்றே நாம் கவலையோடு எடுக்கவேண்டி உள்ளது “ என்று இவர் கூறி இருக்கின்றார் ,

இறந்த ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் . மிகுதிப் பேரை இணங்காண்பது என்பது மன வேதனை அளிக்கும் விடயம் என்றும் இவர் கூறியுள்ளார் .

“நான் இந்த  எரிந்த மாடிக்கட்டிடத்திற்குள்  நேரில் சென்று  பார்த்திருந்தேன் .மேல்மாடி வரை சென்றிருந்தேன் ..கட்டடத்தின் சில பகுதிகள் அடைந்திருக்கும் சேதத்தை வார்ர்த்தைகளால் விபரிப்பது கடினம்” என்று கவலை மேலீட்டால் தளதளத்த குரலில் இவர் பேசியுள்ளார்.

பொலிஸ் தலைமையகமான புது ஸ்காட்லான்ட் யார்ட்டில் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பு இடம் பெற்றிருந்தது . மொத்தம் 250 புலனாய்வாளர்கள் இத் தீவிபத்து சம்பந்தமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்  என்பதையும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு