செய்தி விவரங்கள்

மீண்டும் திறக்கப்பட்டது நோட்டிங்ஹாம் புகையிரத நிலையம்

தீ விபத்தின் காரணமாக மூடப்பட்டிருந்த நோட்டிங்ஹாம் புகையிரத நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் நோட்டிங்ஹாம் புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் திடீரென தீ பரவல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த புகையிரத நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது, அங்குள்ள ஏழு புகையிரத நிறுத்த மேடைகளில், ஐந்து நடை மேடைகளின் (Platform) பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தேசிய புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய புகையிரத சேவைகள் திணைக்களம், புகையிரத சேவைகளை சாதாரண கால அட்டவணைக்கேற்ப இயக்க முடியும் என்று எதிர்பார்க்கின்ற போதிலும், சிலவேளைகளில் இடையூறுகள் நேரிடலாம் என்று தெரிவித்துள்ளது.

மீண்டும் திறக்கப்பட்டது நோட்டிங்ஹாம் புகையிரத நிலையம்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு