செய்தி விவரங்கள்

இனிவரும் காலங்களில் பிரிட்டனில் வசிக்க அடையாள அட்டை ?

ப்றேசிக்ட்(Brexit)  ஒப்பந்தத்தின் முடிவில் பிரிட்டனில் வதியும் மூன்று மில்லியன் வரையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தம் பெயர்களை பதிவு செய்யவேண்டி வரலாமென உள்நாட்டு விவகார அமைச்சு கூறி இருக்கின்றது .

ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் ஐந்து வருட காலம் பிரிட்டனில் வதிய அனுமதிக்கப்பட்டதுபோல, இங்கேயும் இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டி வரலாம் என்று சொல்லப்படுகின்றது .

“settled status”வதிவு என்று இதைக் குறிப்பிடுகிறார்கள் . இந்த அந்தஸ்தை பெறுபவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சில் பதிவு செய்யப்படுவதோடு , ஒரு அடையாள அட்டையையும் பெறுவார்கள் . அல்லது இவர்கள் பெயர்ப் பதிவு மாத்திரம் இருக்கும் .

இந்தப் புதிய மாற்றங்களுக்கான கோட்பாட்டுப் பத்திரம் பிரசுரமாகிய நேரம் , பிரதமர் திரேசா  மே ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார் . பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் , ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின்  உரிமைகள் சம்பந்தமாக அரசின் பிரேரணைகள்  பற்றிய  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் .

 பிரிட்டனில் நிரந்திர வதிவிட உரிமைக்காக  விண்ணபித்த 150,000க்கு மேற்பட்டவர்களை , மீண்டும் விண்ணப்பிக்கும்படி  கோரப்பட்டுள்ளது . மருத்துவக் காப்புறுதி செய்தமைக்கான அத்தாட்சிகள் கோரப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை .

இதுகாலவரை தமது வாழ்க்கைத் துணைவரை பிரிட்டனுக்குள் கொண்டுவர அனுமதித்த  அரசு , பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவில் ,இதை அனுமதிக்கப் போவதில்லை அவரது வருமானம் ஆண்டொன்றுக்கு 18600 பவுண்ட்ஸ் தொகையாக இருந்தால் மாத்திரமே இது அனுமதிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு