செய்தி விவரங்கள்

இலண்டன் பாலத் தாக்குதலில் புதிதாக ஒருவர் கைது

இலண்டன் பாலத்தையொட்டி சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக புதிதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலண்டனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள நியூஹாம் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள 29 வயதுடைய நபர், இதுவரையில் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் 18வது நபராவார்.கடந்த ஞாயிறன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேர் அடுத்த தினமே விடுவிக்கப்பட்டிருந்தார்கள். தற்போது ஐவர் மட்டுமே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த சனிகிழமையன்று இலண்டன் பாலத்தருகே மக்கள் நடைபாதையில் வாகனத்தைச் செலுத்தி வந்த மூவர் வாகனத்தைக் கைவிட்டுவிட்டு, அங்கு நின்றவர்களை கத்தியால் குத்தியுள்ளார்கள். இந்தத் தாக்குதலை நடாத்தியவர்களை பொலிஸார் ஸ்தலத்திலேயே சுட்டுக் கொன்றார்கள். கொல்லப்பட்ட மூவருமே 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் இங்கிலாந்தில் வசிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த கத்திக்குத்து சம்பவத்தில் மொத்தம் 48 பேர் காயமடைந்து, இலண்டனில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.  அதில் 29 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அவர்களில் பத்துப் பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு