செய்தி விவரங்கள்

கடந்த கால தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் சர்வதேச இதழ்- நேஷனல் ஜாக்ராபிக் !

129 வயதை கடந்து வெற்றிகரமாக பத்திரிக்கை துறையில் கோலோச்சி வரும் புகழ்பெற்ற நிறுவனம் நேஷனல் ஜாக்ராபிக். இதன் சமீபத்திய இதழில் இதனை ஆண்டுகளாக இனவெறியுடன் கூடிய ஒரு பார்வையில் செய்திகளை வெளியிட்டதை ஒப்புக்கொண்டு, சுயவிமர்சனம் செய்துகொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறது இந்த இதழ்.பத்திரிகையுலகில் பெரும் மையில் கல்லாக, மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த செயலுக்கு உலகம் முழுக்க பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த கால தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் சர்வதேச இதழ்- நேஷனல் ஜாக்ராபிக் !

இந்த இதழின் ஆசிரியர், சூசன் கோல்டுபெர்க்,இதழின் இனவெறியன் அடிப்படையில் தமது பத்திரிகையின் 100 ஆண்டுகளை ஆராயுமாறு, வரலாற்று அறிஞர் ஜாரோஹன் எட்வின் மேசோனை கேட்டுக்கொண்டதின் பெயரில், அவர் நேஷனல் ஜாகிராபிக்கின் ஆவணங்களை ஆராய்ந்து, இவ்விதழ் தொடர்ந்து நேரிடையாகவோ, மறைமுகமாகவும் இந வெறியுடன் கூடிய ஒரு பார்வையை வாசகர்களிடையே விதைத்ததை கண்டுள்ளார.எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியா பழங்குடியினர் பற்றிய 1961 இல் வெளிவந்த கட்டுரையின் தலையங்கமாக " இந்த கருப்பு காட்டுமிராண்டிகள் மனித குலங்களிலேயே மிக குறைவான அறிவாற்றல் உடையவர்கள்" என்று எழுத பட்டிருக்கிறது.எனினும் கடந்த முப்பதாண்டுகளில் இத்தகைய பதிவுகள் எதுவும் வரவில்லை எனவும் உறுதி செய்திருக்கிறார்.  

இதனை தொடர்ந்து இப்பத்திரிகை ஆசிரியர் கூறுகையில் , தவறுகளை ஒத்துக்கொள்ளும் போதுதான் அதிலிருந்து வெளிவர மாற்றத்திற்கான வழி பிறக்கும், அதனடிப்படையில் இன்று நேஷனல் ஜாக்ராபிக் தன் வரலாற்றினை ஆய்வு செய்து கடந்த கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறது.ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவில் 50 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், இனி வரும் காலங்களில் இன, மத, மொழி, நிற பேதமின்றி முன்னேறுவோம் என அனைவர்க்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு