செய்தி விவரங்கள்

மருத்துவ தாதிகளுக்கான விணப்பங்கள் 96% வீழ்ச்சி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்ற வாக்கெடுப்பு காலம் தொடக்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வதிபவர்கள்  பிரிட்டனின் மருத்துவ தாதிப் பணிக்காக விண்ணப்பிப்பது பெரு வீழ்ச்சியைக் கண்டு வருகின்றது .

 கடந்த வருடம் ஜூலை மாதம் 1,304 மருத்துவ தாதிகள் பணிக்கு இணைந்திருந்தார்கள் . ஆனால் இந்த ஏப்ரில் மாதம் 46பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ள நிலையில் , இது 96 வீத வீழ்ச்சி என்று சொல்லப்படுகின்றது .

விழித்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளை எச்சரிப்பது போல இந்தப் புள்ளி விபரங்கள் அமைந்துள்ளன என்கிறார்கள் .

ஐரோப்பிய ஒன்றிய தாதிகள் , ஆங்கில புலைமைப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டமை இந்த வீழ்ச்சிக்கான இன்னொரு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது .

தற்போதைய நிலையில் இங்கிலாந்தின் தேசீய சுகாதார சேவைக்கு 40,000 தாதிகள் பற்றாக் குறையில் உள்ளதாக அறியப்படுகின்றது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு