செய்தி விவரங்கள்

பிரித்தானிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் நால்வருக்கு மர்ம கடிதம் விநியோகம்!

பிரித்தானியாவின் தொழிற்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு மர்ம கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் முஸ்லிம் தொழிற்கட்சி உறுப்பினர்களான ருசனாரா அலி, மொஹமட் யாசின், ரூபா ஹக் மற்றும் அஃப்சல் கான் ஆகியோருக்கு 'முஸ்லிம் தின தண்டனை' என்ற தலைப்பிலான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி நால்வரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து வாதிட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அக்கடிதத்தை திறக்க முற்பட்ட ரூபா ஹக்கின் அலுவலக ஊழியர் முன்னெச்சரிக்கையாக கடந்த திங்கட்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், யாசின் அலுவலகத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கபட்ட பொதியில் சந்தேகத்திற்குரிய திரவம் வெளியேறியதாகவும் முன்னெச்சரிக்கையாக இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு