செய்தி விவரங்கள்

உலகின் செலவு மிகுந்த நகரம் ஆபிரிக்க நாடொன்றின் தலைநகர் !

ஆபிரிக்க கண்டத்திலுள்ள  அங்கோலா நகரின் தலைநகரான லுஅண்டா(Luanda),. இங்கு வாழும் வெளிநாட்டவர்களுக்கு , உலக நாடுகளின் மற்றைய நகரங்களை விடசெலவு மிகுந்த நகரம் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது . இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு  குடிமனையை வாடகைக்கு எடுப்பதானால் , மாத வாடகையாக 4800 பவுண்ட்ஸ்( ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் ) செலுத்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது . மக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு “ஹாம்பேர்கர் மீல்” (Hamburger Meal) சாபிடுவதானால் 11.50 பவுண்ட்ஸ் தேவை .

இந்த வருடம் மாத்திரமல்ல. தொடர்ந்து  மூன்றாவது . தடவையாக இந்த ஆய்வில் முதலாவது இடத்தை இந்த நகரம் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இரண்டாம் இடம் ஹாங்காங்குக்கு சென்றுள்ளது .ஐரோப்பாவின் மிகப் பெரியதும் , செலவு மிகுந்த நாடுமாக உள்ள சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் மூன்றாவது இடத்தில் நிற்கின்றது . ஐந்தாவது , ஒன்பதாவது இடங்களை மேலும் இரு சுவிஸ் நகரங்களான ஜெனீவாவும், தலைநகர் பேர்னும் பிடித்துள்ளன . .

மொத்தம் 209 உலக நகரங்களில் அன்றாட உணவு உடைக்கான செலவுகள் , வீட்டு வாடகைச் செலவு போன்றன எவ்வளவு தேவைப்படுகின்றது என்று ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள் . இதன் முடிவிலேயே , இந்தத் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .மேர்செர்(Mercer)என்ற நிறுவனமே இந்த ஆய்வுகளை நடாத்தி இருக்கின்றது .

இந்த நகரில் வசிப்பவர்களில் 53வீதமானவர்கள் வறியவர்களாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இன்னொரு ஆபிரிக்க நாடான மொரோக்கோவின் தலைநகரான ரியூனிஸ்,  மிகவும் செலவு குறைந்த நகரங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டு , 209வது இடத்தை தனதாக்கி உள்ளது .

30வது இடத்தில் இருப்பது இந்த அறிக்கையை தயாரித்த இலண்டன் நகரமாகும் .

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு