செய்தி விவரங்கள்

மொன்ரீயல் நகரில் அவசர நிலைமை பிரகடனம்

கனடாவின் மொன்ரீயல் நகரில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான மழை மற்றும் பனி உருகலை தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமை காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்கு இந்த அவரச நிலைமை பிரகடனம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கிழக்கு பகுதியிலுள்ள கியூபெக் நகரில் சுமார் 1,900 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக சுமார் ஆயிரத்து 200 படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

படையினர் மிகவும் துரிதமாகவும் நிபுணத்துவத்துடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் கூறியுள்ளார்.

மொன்ரீயல் நகரின் மேற்கு பிராந்தியம், ரிக்கோ நகரம் ஆகியன கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் ஏற்பட்டுள்ள வலயங்களில் இருந்து மக்கள் கட்டாயம் வெளியேற வேண்டும் என மொன்ரீயல் நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு