செய்தி விவரங்கள்

அயர்லாந்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் ஆட்சி அமைக்கவுள்ளார் மே

பிரித்தானியாவில் இடம்பெற்ற தேர்தலில் கன்சர்வெட்டிவ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறியமையை அடுத்து அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைக்கவுள்ளது.

பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பிரதமர் தெரேசா மேயினது கன்சர்வேட்டிவ் கட்சி அதிகப்படியான ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

எனினும் ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறிவிட்டது.

இந்த நிலையில் கனசர்வேட்டிவ் கட்சி அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் ஆதரவை நாடியுள்ளது.

இதன் மூலம் பிரதமர் மே அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் உதவியுடன் ஆட்சியை அமைக்கவுள்ளார்.

இதற்கமைய தெரேசா மே பிரித்தானிய மகா ராணியை நேற்றைய தினம் சந்தித்து அயர்லாந்து ஜனநாயக யூனியனிஸ்ட்  கட்சியுடன் இணைந்து பிரித்தானியாவில் ஆட்சி அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் திரேஷா மே தலைமையிலான கன்சவேடிவ் கட்சி 319 ஆசனங்களையும் ஜெரமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சி 261 ஆசனங்களையும், எஸ்.என்.பி 35 ஆசனங்களையும் லிபரல் ஜனநாயகக் கட்சி 12 ஆசனங்களையும் அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

எனினும், இந்த தேர்தலில் எந்த வொரு கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.

இதேவேளை, 2 ஆவது தடவையாக ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் தெரேசா மேயிற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும், பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு