செய்தி விவரங்கள்

பார்ப்பவர்களை மிரட்டும் அவலட்சண அரசன் மார்த்தா

உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பெட்டலுமாவில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் மார்த்தா எனும் நாய் 13 போட்டியாளர்களை தோற்கடித்து முதல் பரிசு பெற்றது.

சிவப்பு கண்களுடன்  தோல்கள் மிகுந்த மடிப்புக்களுடன் கீழ் தாடையில் அதிக சதை கொண்ட மாஸ்டினோ இனத்தை சேர்ந்த இந்த நாய் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது.

3 வயதாகும் மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டொலர்களும் வழங்கப்பட்டது.

இது குறித்த அதன் உரிமையாளர் ஜின்டலர் கூறுகையில் நாய்கள் பாதுகாப்பு மையத்தில் இருந்து மார்த்தா மீட்டெடுக்கபட்டது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு