செய்தி விவரங்கள்

பல உயிர்களைக் காவு வாங்கிய பேரனர்த்தம்: தொடரும் அவலம்! (படங்கள்)

 

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கடும் மழையினால் 30 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த நாட்டு உள்துறை அமைச்சு அலுவலகம் அறிவித்துள்ளது.

இதில் பத்து பேரைக் காணவில்லை என்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு நாட்டின் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது என நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகளை மூழ்கடித்த வெள்ளப்பெருக்கினால் வீட்டுக் கூரைகளிலும் உயர்ந்த நிலப்பிரதேசங்களிலும் சிக்கியுள்ளோர் அந்த நாட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டு வருகின்றனர்., 

நேபாளத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவ மழையானது விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் இந்த பருவமழையானது ஒவ்வொரு ஆண்டும் அழிவை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

நேபாள உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தீபக் கபில் ரொய்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில், ”சொத்து இழப்புகளுக்கு தற்போது மதிப்பீடு எதுவும் இல்லை. இங்கே 30 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர், ஆனால் இறந்தவர்களின் விவரங்களை சேகரிப்பதைவிட உயிருடன் இருப்பவர்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்," என அவர் கூறினார்.

கிழக்கு நகரமான பிராட்நகரில் ஒரு விமான ஓடுபாதை இரண்டு அடி உயரம்கொண்ட வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கே விமானப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் சேதமடைந்திருப்பதனால் போக்குவரத்துக்கள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறியுள்ளது. 

மேலும், உள்ளூர் அதிகாரிகள், பாடசாலைகளில் அல்லது பொது கட்டிடங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக முகாம்களைத் திறந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு