செய்தி விவரங்கள்

விஜய் மல்லையாவை திருடன் திருடன் என்று வரவேற்ற லண்டன் மக்கள்..!!

லண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைக் காணவந்த விஜய் மல்லையாவை, திருடன் திருடன் என்று இந்தியர்கள் கோஷமெழுப்பிய சம்பவம் வைரலாகப் பரவி வருகிறது. தென்னாப்ரிக்கா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியைக் காண இந்திய வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடி, தலைமறைவாகிவிட்ட தொழிலபதிர் விஜய் மல்லையா வந்திருந்தார். ஓவல் மைதானத்தின் சர் ஜேக் ஹேப்ஸ் கேட் வழியாக உள்ளே வந்த விஜய் மல்லையாவைப் பார்த்ததும் அங்கிருந்த இந்திய ஆதரவாளர்கள், திருடன் திருடன் என்று கத்தினார்கள்.

ஒரு இந்தியர் விஜய் மல்லையா உள்ளே நுழைவதை விடியோ எடுக்க, மற்றொருவர் இதோ உள்ளே வருகிறாரே இந்த திருடனைப் பாருங்கள் என்று குரல் எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது. முன்னதாக, இந்தியாவின் பல்வேறு வங்கிகளிலும் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை, நாட்டுக்கு திரும்பக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு