செய்தி விவரங்கள்

தகிக்கும் வெயிலின் பின்னர், பிரிட்டனில் வரப்போகும் ஐஸ்கிரீம் கோடை

கடந்த 41வருடங்களில் என்றும் இல்லாதவாறு மிகச் சூடான ஜூன் வாரத்தைச் சந்தித்த பிரிட்டனை நோக்கி “ஐஸ்கிரீம் கோடை” வந்து கொண்டிருப்பதாக  வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளார்கள் .

இன்றிலிருந்து ஒரு வாரத்தில் மிகப் பிரபல்யமான விம்பிள்டன்டென்னிஸ் போட்டிகள் ஆரம்பமாவதால் , இந்தத் தகவல் பலரைக் குதூகலப்படுத்தும் என்று அவதானிகள் கருதுகின்றார்கள் .

அடுத்த வரம் மழைத் தூறலும் குளிர்மையும் பிரிட்டனுக்குள் நுழைந்தாலும் , அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் தகிக்கும் வெயில் மீண்டும் வரலாமென இவர்கள் எச்சரிக்கின்றார்கள் .

ஒரு குறிப்பிட்ட  பிரித்தானிய கல்வி நிலைய மாணவர்கள் மோசமான காலநிலை காரணமாக அரைக் காற்சட்டை அணிந்து வகுப்புகளுக்கு வர அனுமதி கோரி இருந்தார்கள். ஆனால் இந்தத் தவணை அது சாத்தியப்படாது என்று அறியப்படுகின்றது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு