செய்தி விவரங்கள்

லண்டனில் 24 தளம் அடுக்குமாடி தீ விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்தது. அந்தக் கட்டடத்தில் இன்னும் பல உடல்கள் மீட்கப்படாமல் உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. புதன்கிழமை தீவிபத்துக்குள்ளான கிரீன்ஃபெல் டவர் கட்டடத்தில் இருந்து இதுவரை 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், அந்தக் கட்டடத்துக்குள் மேலும் பல உடல்களை மீட்க வேண்டியுள்ளது. எனவே, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும்.

சதிச் செயல் காரணமாக கிரீன்ஃபீல்டு டவரில் தீப்பிடித்ததாக சந்தேகிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணை முடிய பல வாரங்கள் பிடிக்கும். விபத்துக்குள்ளான கட்டடத்தில் யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிக மோசமாக எரிந்து சாம்பலாகியுள்ளதால், அவர்கள் யாருடைய அடையாளத்தையும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்றார்.

இந்த விபத்து குறித்து குற்றவியல் விசாரணை நடைபெறும் என்றனர். ஏற்கெனவே விடுக்கப்பட்ட பல்வேறு பாதுகாப்பு எச்சரிக்கையை கிரீன்ஃபீல்டு டவரை நிர்வகித்து வரும் கென்சிங்டன் செல்சா வாடகை நிர்வாக அமைப்பு அலட்சியப்படுத்தியதே இந்த மோசமான தீவிபத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, நீதிபதி தலைமையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்த விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் மீண்டும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று உள்ளூர் நிர்வாகத் துறையின் வீட்டு வசதி அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்தர். இந்தப் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இவர், இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனின் மேற்குப் பகுதியில், வடக்கு கென்சிங்டனில் பொதுத் துறைக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. பெரும்பாலும் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் அமைந்துள்ள கட்டடங்களில் ஒன்றான 24 அடுக்கு கீரீன்ஃபீல்டு டவரில் 2-ஆவது மாடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து, அந்தத் தீ மற்ற தளங்களுக்கும் வேகமாகப் பரவியது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு