செய்தி விவரங்கள்

லண்டன் தீ விபத்து ஏற்பட காரணம் வெளிவந்துள்ளது..!!!

லண்டன் கிரென் பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பழுதான குளிர்சாதன பெட்டி காரணமாகவே ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட கிரென் பெல் டவர் குடியிருப்பில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தற்போது வரை 79-பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 42-பேர் ஒரே அறையில் இறந்து கிடந்ததாகவும், அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இறந்தவர்களை அடையாளம் காண முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தீ விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பழுதாகி இருந்த குளிர்சாதன பெட்டியில் இருக்கும் freezer பகுதியில் இருந்துதான் தீ வெளிப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்பில் முறையான பராமரிப்பு மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் இல்லாததும் முக்கிய காரணம் எனவும் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு