செய்தி விவரங்கள்

லண்டன் தீ விபத்து : 58 பேர் பலியாகியிருக்கலாம்

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள க்ரன்ஃபெல் டவேர்ஸ் தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காணாமல் போன 58 பேரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீக்கிரையான தொடர்மாடிக் கட்டடத் தொகுதியில் மீட்புப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பணிகளுக்கு மேலும் பல வாரங்கள் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டு சில மணித்தியாலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஒத்துழைப்பு போதுமானதாக இருக்கவில்லை என்பதை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஏற்றுக்கொண்டுள்ளார்.

தன்னார்வப் பணியாளர்கள் மற்றும் வீடுகளை இழந்த மக்களைச் சந்தித்த பின்னர் தெரேசா மே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு