செய்தி விவரங்கள்

London Bridge station பகுதியில் பொதுமக்கள் மீது தீடீர் தாக்குதல்

லண்டன் London Bridge station பகுதியில் பொதுமக்கள் மீது தீடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பொது மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது.

இதனால் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக குறி;த்த பகுதியில் போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அப்பாலத்தை பொலிசார் மூடியுள்ளனர். அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடுமோ என்று அஞ்சப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை அண்மையில், மான்செஸ்டர் பகுதியில் திவீரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 22-பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு