செய்தி விவரங்கள்

ரஷ்ய தூதுவருடன் இரகசிய கலந்துரையாடலை மேற்கொண்டாரா ரொட் குஷ்னர்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும் சிரேஷ்ட ஆலோசகருமான ஜெராட் குஷ்னர் அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதுவருடன் இரகசிய கலந்துரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதுவருடன் ஜெராட் குஷ்னர் ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தின்போதும் அதற்கு பின்னரும் குறைந்தபட்சம் மூன்றுமுறை முன்னறிவிப்பில்லாது, இரகசிய தொடர்பை மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட இந்த தொடர்பாடல்களில் இரண்டு, தொலைபேசி உரையாடல் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க தேர்தல் பிரசார காலத்தின்போது ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததா என்பது தொடர்பான விசாரணைகளை அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருகிறது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் ஜெரட் குஷ்னர் மீதும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு