செய்தி விவரங்கள்

பிரித்தானியாவிற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய அமைச்சர் ரஷ்யா மீது கண்டனம்!

பிரித்தானியாவில் ரஷ்யாவின் முன்னாள் உளவாளி இரசாயண தாக்குதலுக்கு இலக்கான விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்ட பிரித்தானியாவிற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கும் என அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இவ்விடயம் தொடர்பில், ரஷ்யாவில் பொருளாதார தடைகள் இருப்பினும் ரஷ்ய உளவாளி விடயத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விசாரணைகள் முடிந்தாலும் கூட பதிலையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரகாலச் செயலாளருக்கு இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து பகிரங்கமாக தனது கண்டனத்தையும் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷப் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபல் மற்றும் அவருடைய மகள் யூலியா ஆகிய இருவரும் கடந்த 4ஆம் திகதி பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வெளியில் இருந்த கதிரையில் மயக்கமடைந்த நிலையில மீட்கப்பட்டனர்.

இதேவேளை, இவர்கள் இருவரும் ரஷ்யாவால் உருவாக்கபபட்ட நரம்புமண்டலத்தை பாதிக்கக்கூடிய இரசாயண வாயுவால் மயக்கமடைந்ததாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், இத்தாக்குதலின் பின்னணில் ரஷ்யாவே இருப்பதாக கடந்த திங்கட்கிழமை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து இவ்விடயத்தில் அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியன பிரித்தானியாவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கெனவே தெரிவித்ததையடுத்து இவர்களுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு