செய்தி விவரங்கள்

ஜப்பானில் திருமண வயது எல்லை 20இல் இருந்து 18ஆக குறைப்பு!

ஐப்பான் நாட்டில் பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்வதற்கான வயதெல்லை 20 இருந்து 18ஆக குறைக்கம் மதோசாவை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மசோதாவின் படி, ஜப்பானிய குழந்தைகள் பெரியவர்கள் ஆனதற்கான சட்டபூர்வமான வயது 18ஆகக் இனி கருதப்படும்.

இதன்படி, 18 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் முடித்தல் மற்றும் வங்கிளின் வணிக ஒப்பந்தங்களில் கைnழுத்திடல் போன்ற நடவடிக்கைகளை சுயமாக மேற்கொள்ள முடியும்.

எனினும், புகை பிடித்தல், மது அருந்துதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட 20 வயதே சட்டபூர்வமானதாக தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான சட்ட மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் கடந்த செய்வாய்க்கிழமை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட இந்த வயதெல்லை தொடர்பான சட்டத்தில் முதல் முறையாக அந்நாட்டு அரசு திருத்தம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி, இந்த சட்டம் நிறைவேற்றப்போட்டால், புதிய வயது வரம்பு 2022ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு