செய்தி விவரங்கள்

ஜேம்ஸ் கோமே காங்கிரஸ் விசாரணைக் குழுவில் தெரிவித்த தகவல்கள் பொய்யா?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான எப்.பீ.ஐ. யின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமே நேற்றைய தினம் காங்கிரஸ் விசாரணைக் குழுவின் முன்னிலையில் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது சாட்சியில் தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாகவும் பொய்கள் நிறைந்ததாகவும் இருந்ததாக அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  மற்றும் அவரது தேர்தல் அலுவலக அதிகாரிகள் ரஷ்யாவுடன் ரகசிய தொடர்புகளைப் பேணி வருவதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் எப்.பீ.ஐ யின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமேயை டிரம்ப் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.

இந்த நிலையில் டிரம்பின் அதிகாரிகளுக்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான ரகசிய தொடர்பு தொடர்பில் விசாரணை நடத்திவரும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் விசாரணைக் குழுவினர் நேற்றைய தினம் எப்.பீ.ஐ யின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதன்போது தன்னை அவமானப்படுத்திய அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் ரஷ்யா தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்காகவே பதவியிலிருந்து நீக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.

அத்துடன் டிரம்ப் டமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளேன் தொடர்பான விசாரணைகளையும் கைவிடுமாறு தனக்கு டிரம் அழுத்தம் கொடுத்து வந்தாகவும் கோமே குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன்னர் ரஷ்ய தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அமெரிக்க துணை அதிபருக்கு தவறான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்தே பிளேன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை தன்னை நடத்திய விதம் எப்.பீ.ஐ தொடர்பில் அமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது நிர்வாகமும் தெரிவிக்கும் கருத்துக்கள் காரணமாக எப்.பீ.ஐ யில் உள்ள ஏனைய அதிகாரிகள் மத்தியில் அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கோமே குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்,  கேமே பொய்களை  அள்ளி வீசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு